புதர் மண்டி கிடக்கும் உடுமலை கால்வாயை தூர் வார கோரிக்கை

உடுமலை: திருமூர்த்தி அணையில் இருந்து செல்லும் உடுமலை கால்வாய் 123 கிமீ., நீளம் கொண்டது. இதன்மூலம் இரு மாவட்டங்களில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.இந்த கால்வாய் பல இடங்களில் புதர் மண்டி கிடக்கிறது. கால்வாயின் உட்பகுதியிலும், கரைப்பகுதியிலும் சுமார் 5 அடி உயரத்துக்கு செடிகள் வளர்ந்து, கால்வாயே தெரியாத அளவுக்கு மறைந்துகிடக்கிறது.

இதனால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது, பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை உள்ளது. மேலும், கால்வாய் செல்லும் இடமான போடிப்பட்டி முதல் வெஞ்சமடை வரை ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த புதர்களில் இருந்து விஷ ஜந்துக்கள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. எனவே, அடுத்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்பாக உடுமலை கால்வாயில் படர்ந்துள்ள புதர்களை வெட்டி அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: