பிரேசில் நாட்டில் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 35 பேர் பரிதாப பலி

அலகோஸ்: பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான பரனம்போபோவில் நேற்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர். இப்பகுதியில் உள்ள மற்றொரு மாநிலமான அலகோஸில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பர்னாம்புகோவில் வெள்ளம் காரணமாக 1,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். 32,000 குடும்பங்கள் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கின்றன என்று சிவில் பாதுகாப்பு முகமையின் நிர்வாகச் செயலாளர் லெப்டினன்ட் கர்னல் லியோனார்டோ ரோட்ரிக்ஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக 33 நகராட்சிகளுக்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினரும், ஆயுதப்படை குழுக்களும் நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.

Related Stories: