ஆற்றில் சாக்கடைநீர் கலப்பதை கண்டித்து தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்-தரங்கம்பாடி அருகே பரபரப்பு

தரங்கம்பாடி : தரங்கம்பாடி அருகே சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்து, ஆற்றில் வாலிபா; தலை கீழாக நின்று போராட்டம் நடத்தினார்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடு அருகே உள்ள இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கதிரவன் (30). இவர் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் சாக்கடை நீர் கலப்பதை கண்டித்தும், சுத்தம் செய்ய வலியுறுத்தியும் ஆற்றில் கலந்துள்ள சாக்கடை அருகே தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினார்.

அப்போது ஊராட்சிகளின் வளர்ச்சி பணிகளை பார்வையிட்ட மயிலாடுதுறை கலெக்டர் லலிதா அவ்வழியே வந்தார். மக்கள் கூட்டமாக நிற்பதை பார்த்து காரை நிறுத்தி விசாரித்தார். அங்கிருந்த மக்கள் வாலிபரின் தலைகீழ் போராட்டம் குறித்து விளக்கினர். உடனடியாக அந்த வாலிபரை அழைத்து அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவது தவறு, இந்த பகுதி மக்கள் அறியாமையால் தான் ஆற்றில் கழிவு நீர் கலக்கபடுகிறது. எனவே மக்களுக்கு ஆற்றில் கழிவு நீர் கலக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சம்மந்தபட்ட அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுரை செய்தார். அதை தொடர்ந்து வாலிபர் தன் போராட்டத்தை கைவிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: