ஜகர்தா: ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி இந்தோனேசியாவில் நடக்கிறது. ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியன் இந்தியா நேற்று தனது கடைசி லீக் ஆட்டத்தில் இந்தோனேசியாவுடன் மோதியது. முன்னதாக இந்தியா முதல் லீக் ஆட்டத்தில் ஜப்பானிடம் தோற்றாதாலும், 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் டிரா செய்ததாலும் ஒரே ஒரு புள்ளியுடன் 3வது இடத்தில் இருந்தது. எனவே இந்தோனேசியாவை அதிக கோல் வித்தியாசத்தில் வீழ்த்தினால் தான் சூப்பர்-4 வாய்ப்பு என்ற நிலை. காரணம் வெற்றிப் பெற்றாலும் இந்தியா 4 புள்ளிகளுடன் 3வது இடத்தில்தான் இருக்கும். காரணம் பாகிஸ்தானும் தலா ஒரு வெற்றி, டிரா, தோல்வி மூலம் அதே 4 புள்ளிகளை பெற்றிருந்ததுான். கோல்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2வது இடத்தில் இருந்தது.