நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வாகனத்தை வழிமறித்த காட்டு யானை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானை வாகனத்தை வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள முள்ளூர், மாமரம்,குஞ்சப்பனை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பலாப்பழம் சீசன் என்பதால் சமவெளிப் பகுதிகளில் இருந்து காட்டு யானை கூட்டம் தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டுள்ள யானைக் கூடங்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் அவ்வப்போது பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலைகளில் உலா வருவது வாடிக்கையாக உள்ளது. மேலும் நேற்று இரவு மேட்டுப்பாளையத்திலிருந்து கோத்தகிரி நோக்கி வந்து கொண்டிருந்த காரை சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை திடீரென காரை தாக்க வழிமறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த காட்சியை அவ்வழியாக பயணித்த மற்றொரு வாகன ஓட்டி தனது கைப்பேசி மூலம் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தற்போது வைரலாகி வருகிறது. எனவே இரவு நேரங்களில் மலைப்பாதையில் பயணிப்போர் கவனமுடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

Related Stories: