சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி; பாதிப்பு எண்ணிக்கை 11ஆக உயர்வு

சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வந்த நிலையில், இன்று தொற்று 2000-க்கும் கீழ் சரிந்துள்ளது. அதன்படி, இந்தியாவில் புதிதாக 1,675 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 21ஆம் தேதி பாதிப்பு 2,323 ஆகவும், 22ஆம் தேதி 2,226 ஆகவும் இருந்தது.

இந்த எண்ணிக்கை நேற்று 2,022 ஆக குறைந்த நிலையில், 3ஆவது நாளாக இன்றும் பாதிப்பு எண்ணிக்கை 2000க்கும் கீழே சரிந்துள்ளது. கொரோனாவால், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 40,068 ஆக உயர்ந்தது. இதுவரை கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,24,490 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 1,635 பேர் குணமாகி உள்ளனர். அதன்படி, இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 737 ஆக உயர்ந்தது. தற்போது 14,841 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில்,சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் முதலாவதாக 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 40 மாணவர்களை பரிசோதனை செய்ததில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் அவர்கள் அனைவரும் தனிமைப் படுத்தப்பட்டுளனர். இந்நிலையில் அந்த எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 160 பேரை பரிசோதித்ததில் 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: