3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள்.

Related Stories: