தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழாவை சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். பின்னர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த பொருட்களையும் பார்வையிட்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர்; நாட்டிலேயே முதன் முறையாக தொடங்கப்பட்ட 3 மகளிர் கல்லூரிகளில் ராணி மேரி கல்லூரியும் ஒன்று. தமிழ்நாட்டிலேயே முதல் மகளிர் கல்லூரி ராணி மேரி கல்லூரி தான். ராணி மேரி கல்லூரியை இடிக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சித்தார். ராணி மேரி கல்லூரியை இடிக்கக் கூடாது என பேராசிரியர்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

ராணி மேரி கல்லூரியில் அத்துமீறி நுழைந்ததாக அப்போது நான் கைது செய்யப்பட்டேன். புகழ்பெற்ற ராணி மேரி கல்லூரியில் ரூ.3.2 கோடியில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. அதிமுக ஆட்சியில் கலைஞர் மாளிகையின் பெயர் நீக்கப்பட்டது. இளைஞர்கள் தான் நாட்டின் முதுகெலும்பாக இருக்கின்றனர். நாட்டின் வளர்ச்சி என்பது இளைஞர்களை நம்பியே இருக்கிறது. இளைஞர் சக்தியை ஊக்குவிக்கும் கல்வியை அளிக்க வேண்டும். இளைஞர்களின் தகுதிக்கேற்ப அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டின் திறன் மேம்பாட்டு இயக்கத்தை உருவாக்கியவர் கலைஞர். வேலை இல்லை என்ற நிலையையும், வேலைக்கு தகுதியுள்ள இளைஞர் என்ற நிலையையும் மாற்றம் முயற்சித்து வருகிறோம்.

இளைஞர்களை திறன்மிக்கவர்களாக்க தொடங்கப்பட்ட கனவுத் திட்டம் தான் நான் முதல்வன் திட்டம். மாணவர்கள் திறமைகளை வளர்த்துக் கொண்டு அதற்கேற்ப தங்களுக்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள நான் முதல்வன் திட்டம். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 10 ஆண்டுகளில் 10 லட்சம் இளைஞர்களுக்கு கல்வி, அறிவு, திறனை உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. 21ம் நூற்றாண்டுகளுக்கான திறன்களை வழங்கி இளைஞர்களை திறன்மிக்கவர்களாக மாற்ற வேண்டும். தமிழ்நாட்டின் மாணவர்கள் மிகவும் திறமையானவர்கள்; அவர்களின் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும்.

நாட்டிலேயே முதல் முறையாக தருமபுரியில் தொடங்கப்பட்டது மகளிர் சுய உதவுக்குழு திட்டம். இளைஞர்கள் வாழ்வுக்கு மேலும் பலம் சேர்க்கும் நோக்கில் இளைஞர் திறன் திருவிழா நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories: