என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை எனக்கு இருக்கிறது: சென்னையில் சசிகலா பேட்டி

சென்னை: என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை என்னக்கு இருக்கிறது என சசிகலா தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக நிர்வாகி குணசேகரனின் இல்ல திருமண விழாவில் சசிகலா கலந்துகொண்டார். திருமண மண்டபத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மண்டபத்திற்கு முன்பு வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மணமக்களை வாழ்த்திய அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு புரச்சித்தலைவரும், அம்மா ஜெயலலிதாவும் மக்களுக்காக செயல்பட்டனர். என் தலைமையில் அதிமுக செயல்படும் என 100% நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதிமுகவில் என்னை இணைக்க முடியாது என சொல்வதற்கு அவர்கள் யார்? அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்த்து பேசவில்லை. ஒருசிலர் தான் பேசுகிறார்கள். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் என்னுடன் பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர். யார் என்பதை வெளியில் சொல்ல முடியாது. அதிமுகவில் இணைவது தொண்டர்களின் கையில் தான் உள்ளது.

நான் தொண்டர்களையும் பார்க்கிறேன், மக்களையும் பார்க்கிறேன். அதிமுக தலைவர் தொண்டர்களால் தேர்வு செய்யப்படும்; அந்த நிலைமை தற்போது இல்லை. அதிமுக எதிர்க்கட்சியாக சரியாக செயல்படவில்லை. ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்துவது பத்திரிக்கையாளர் கடமை. பிரதமர் தமிழகத்திற்கு வர உரிமை உள்ளது எனவும் கூறினார்.

Related Stories: