வாணியம்பாடி கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் தள்ளுபடி ஆகியும் நகை தரமறுப்பு-மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மூதாட்டி புகார்

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி தலைமையில் நடந்தது. இதில் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில்  வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கூட்டுறவு கடனுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள்,  குடிநீர் வசதி, வேலைவாய்ப்பு மற்றும் பொதுநலன் குறித்த  286 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது உரிய விசாரணை தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

கூட்டத்தில் உதயேந்திரம் பேரூராட்சி திமுக செயலாளரும், பேரூராட்சி உறுப்பினருமான செல்வராஜ் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்றாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக உதயேந்திரம் ஏரிக்கரை பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தோம். தற்போது  அங்கிருந்து எங்களை காலி செய்ய சொல்லிவிட்டனர். இதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம். தற்போது 40 குடும்பத்தில் 15 குடும்பங்களுக்கு மட்டுமே வேறு இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.

 

மீதமுள்ள குடும்பங்களுக்கு பட்டா ஏதும் வழவில்லை. எனவே எங்கள் குடும்பத்தின் நலன் கருதி இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதேபோல் வாணியம்பாடி கொத்தகொட்டாய் பகுதியை சேர்ந்த  அண்ணம்மாள் அளித்துள்ள மனுவில் வாணியம்பாடி கூட்டுறவு வங்கியில் நகைகடன் பெற்று இருந்தேன். அந்த நகைகடன் தள்ளுபடி ஆனது.

ஆனால் வங்கி அதிகாரிகள் நகை தரமறுப்பதாக புகார் அளித்தார்.

Related Stories: