கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது ஜோ பைடன் பாராட்டு..!

டோக்கியோ: அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் அமைப்பின் மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்றது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே டோக்யோவில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் சந்தித்து பேசினர். இரு நாட்டு உறவு, கொரோனா பரவல் குறித்து பேசினர். இரு தரப்பு பேச்சுவார்த்தையின் போது பேசிய அதிபர் ஜோ பைடன்; கொரோனா செயல்பாடுகளில் சீனா தடுமாறி வருவது ஆதாராப்பூர்வமாக தெரிகிறது. சீனா நமது மக்கள் மீது கடும் கட்டுப்பாடுகள் விதித்து வரும் நிலையில் இந்தியா சிறப்பாக பணியாற்றியது. கொரோனா தொற்றை இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது.

இந்தியாவின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பைடன் பாராட்டு தெரிவித்தார். இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பல விஷயங்களை செய்ய முடியும். பூமியில் நமது கூட்டாண்மையை மேலும் நெருக்கமாக்க நான் உறுதி எடுத்துள்ளேன். என கூறினார். அப்போது பேசிய பிரதமர் மோடி; இந்தோ - பசுபிக் உறவில் இரு நாடுகளின் பார்வை ஒரே அளவில் உள்ளது. பேச்சுவார்த்தை இரு நாடுகள் இடையேயான உறவை மேம்படுத்தும் இவ்வாறு கூறினார். குவாட் மாநாட்டின் போது ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரதமர்களுடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்த அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: