ரஷ்ய பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார் அதிபர் புடினை கொல்ல முயற்சி: உக்ரைன் உளவுத்துறை தலைவர் தகவலால் பரபரப்பு

கீவ்: ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  நேட்டோ அமைப்பில் இணைய எதிர்ப்பு தெரிவித்து, கடந்த பிப். 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. போர் தொடங்கிய முதல்நாளே ரஷ்ய படைகள், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினரை கொலை செய்யும் நோக்கில் பாராசூட் மூலம் இறங்கி தாக்குதல்கள் நடத்தியதாகவும், அவர்களிடம் இருந்து முதலில் குடும்பத்தினரும், தொடர்ந்து ஜெலன்ஸ்கியையும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், 2 மாதம் முன்பே ரஷ்ய அதிபர் புடினை கொலை செய்யும் முயற்சி நடந்ததாக உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளதாக ரஷ்யாவின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘உக்ரைன் மீது படையெடுத்த பின்னர் ரஷ்ய அதிபர் புடினை, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஜார்ஜியா மற்றும் தெற்கு ரஷ்யாவின் சில பகுதிகளை  உள்ளடக்கிய காகசஸ் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் படுகொலை செய்ய  முயன்றனர். காகசஸின் பிரதிநிதிகளால் தாக்கப்பட்டார். இது ஒரு முற்றிலும் தோல்வியுற்ற முயற்சி. இது சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது’ என்று தெரிவித்தார். புடின் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டும் நிலையில், இந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்ய வீரருக்கு வாழ்நாள் சிறை

* உக்ரைன் போரில் ஏராளமான ரஷ்ய வீரர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்துள்ளது. அவர்களிடம் போர் குற்றம் தொடர்பான விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இதில், தலைநகர் கீவ்வில் சைக்கிளில் சென்ற சாமானியர் ஒருவரை, 21வது ரஷ்ய வீரர் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது. இது, போர் குற்றமாக கருதப்பட்டு அவரிடம் விசாரணை நடந்தது. அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உக்ரைன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் போர் குற்ற வழக்கில் தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 2,500 உக்ரைன் வீரர்களை ரஷ்யா சமீபத்தில் கைது செய்துள்ளது. அவர்களிடமும் ரஷ்யா போர் குற்ற விசாரணை நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

* போரை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யா மீது அதிகளவிலான தடைகளை விதிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, அனைத்து ரஷ்ய வங்கிகள், ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி, ரஷ்யாவுடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

Related Stories: