திருவள்ளூர் நகர திமுக சார்பில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம்: அமைச்சர் நாசர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் நகர திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருவள்ளூர் ரயில் நிலையம் அருகில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி தலைமை வகித்தார். நகர செயலாளரும், நகர மன்ற துணை தலைவருமான சி.சு.ரவிச்சந்திரன் வரவேற்றார். அவை தலைவர் தே.தேவன், நகர மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், நகர நிர்வாகிகள் கோவி.மனோகரன், ராஜேஷ்வரி கைலாசம், இ.குப்பன், வே.ரமேஷ்பாபு, ஜெ.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன், இலக்கிய அணி இணைச் செயலாளர் வி.பி.கலைராஜன், தலைமை பேச்சாளர் மார்ஷல் ஆகியோர் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கே.திராவிடபக்தன், ஆர்.டி.இ.ஆதிசேசன், எஸ்.கே.ஆதாம், சரஸ்வதி சந்திரசேகர், ப.சிட்டிபாபு, கே.யு.சிவசங்கரி, எம்.பன்னீர்செல்வம், ஒன்றிய செயலாளர்கள் கூளூர் எம்.ராஜேந்திரன், மோ.ரமேஷ், எஸ்.மகாலிங்கம், டி.கிறிஸ்டி, கே.அரிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளர்கள் டி.கே.பாபு, தி.ஆ.கமலக்கண்ணன், சி.சு.விஜயகுமார், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.பவளவண்ணன் மற்றும் மூத்த முன்னோடிகள் ஒன்றிய, நகர நிர்வாகிகள், வார்டு, கிளை செயலாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் ப.நந்தகுமார் நன்றி கூறினார்.

Related Stories: