குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்: பெல்ஜியம் அரசு உத்தரவு

பெல்ஜியம்: குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள பெல்ஜியம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. உலக நாடுகளில் பரவி கொண்டு வரும் குரங்கு காச்சல் வைரஸ் 12 நாடுகளில் மொத்தம் 92 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 28 பேர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் அறிகுறியுடன் இருக்கிறார்கள் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்திருந்தது.

குரங்கு காச்சல் வைரஸின் அறிகுறியாக காய்ச்சல், தசை வலி மற்றும் தலைவலி ஏற்படும். மேலும், சொறி ஏற்பட்டு பின்பு முற்றி சிரங்காக உருவாகும். உடல் முழுவதும் சிறு சிறு செதில் போன்று தோல்களில்வெடிப்பு உண்டாக்கும் என்று எச்சரிக்கை படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குரங்கு காச்சல் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் தங்களை கட்டாயம் 21 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு பெல்ஜியம் அரசு முதன் முதலில் உத்தரவிட்டுள்ளது.

பெல்ஜியத்தின் கொரோனா தேசிய ஆய்வகத்தின் பொறுப்பாளரான இம்மானுவேல் ஆண்ட்ரே சமீபத்தில் ஒரு தகவல் வெளியிட்டு இருந்தார். நாட்டில் தற்போது நான்காவதாக ஒருவருக்கு புதிதாக குரங்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மேலும், நோயாளி வாலோனியாவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று  தகவல் வெளியிட்டுருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: