கனமழையால் மோசமான வானிலை!: சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து..பயணிகள் தவிப்பு..!!

டெல்லி: மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பெய்ததால் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. டெல்லிக்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், மும்பை, அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. சூறாவளி காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே,

டெல்லியில் பலத்த மழையால் சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 11 விமானங்கள் பல மணி நேரம் தாமதத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு மாலை 3.10 மணிக்கு செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு மாலை 5.15 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானது.

* டெல்லியில் இருந்து மாலை 4 மணிக்கு சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

* டெல்லியில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

* டெல்லியில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

Related Stories: