கும்மிடிப்பூண்டி அருகே வெங்கடேச பெருமாள் ஆலய கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே வெங்கடேச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டி அருகே பூங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டுக்குளம் கிராமத்தில் உள்ள ராதா ருக்மணி சமேத ஸ்ரீவெங்கடேச பெருமாள் ஆலயம் மற்றும் ஸ்ரீமுனிஸ்வரர் கோயிலில் நேற்று காலை 7 மணியளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, கோபுர கலசங்களில் சிவாச்சாரியர்கள் புனித நீர் ஊற்றி நடத்தி வைத்தனர். பின்னர் அங்கு கூடியிருந்த சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories: