‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்

ஆலந்தூர்: தொகுதி மக்களின் புகார்களை பெற்று அதை நிறைவேற்றும் வகையில், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் உருவாக்கிய ‘வளமான ஆலந்தூர்’ என்ற இணையம் மற்றும் செயலி அறிமுகவிழா நேற்று நடந்தது. அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். டி.ஆர்.பாலு எம்பி இணையளத்தையும், ஆர்.எஸ்.பாரதி எம்பி செயலியையும் தொடங்கி வைத்தனர். அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘பொதுமக்கள் தங்களது புகார்களை தரம் பிரித்து இதில் பதிவு செய்யலாம். அதன்மீது அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்,’ என்றார். நிகழ்ச்சியில் ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன், குன்றத்தூர் ஒன்றிய குழுத்தலைவர் படப்பை மனோகரன், ஒன்றிய தலைவர் வந்தே மாதரம், பகுதி செயலாளர் பி.குணாளன், ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர் நாஞ்சில் பிரசாத், பிருந்தாஸ்ரீ முரளி கிருஷ்ணன்,பூங்கொடி ஜெகதீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: