தங்கம் வாங்குறது ரொம்ப கஷ்டம்... வாங்க முடியாத உச்சத்தில் விலை : ஒரு சவரன் ரூ.248 உயர்ந்து ரூ.38,288 விற்பனை!!

சென்னை : அண்மைக்காலமாக தங்கம் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென தாறுமாறான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.ஏதோ ஒரு நாள் விலை குறைக்கப்பட்டாலும் அடுத்து வரும் நாட்களில் மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் நகை வாங்கும் பெரும் சிரமத்தில் உள்ளனர். நேற்றைய நிலவரப்படி தங்க விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து, ரூ.38,040-க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை 2வது நாளாக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று  ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.31 அதிகரித்து ரூ.4,877 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,846 ரூபாயாக இருந்தது. அதேபோல,  8 கிராம் ஆபரணத் தங்கம் 248 ரூபாய் உயர்ந்து 38,288 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 65.90 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 65,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ரஷ்யா - உக்ரைன் பிரச்சனை, பணவீக்கம், கொரோனா பரவல் பற்றிய அச்சம் என பல காரணிகளுக்கு மத்தியில் தங்கம் விலையானது நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

Related Stories: