நடிகை தற்கொலை

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவை  சேர்ந்தவர் ஷெரின் ெஷலின் மேத்யூ (24). திருநங்கை. சில மலையாளப் படங்களில்  நடித்து இருக்கிறார். இவர், கொச்சி களமசேரியில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் தூக்கில் சடலமாக கிடந்தார். தகவலறிந்தது பாலாரிவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ஷெரின் ெஷலின் மேத்யூ உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் ஷெரின்ெஷலின் மேத்யூ தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதையடுத்து, தலைமறைவாகி உள்ள காதலனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: