பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டது: பழ.நெடுமாறன் பேட்டி

தஞ்சை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு எனவும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலை என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த தீர்ப்பின் அடிப்படையில், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 26 குடும்பத்தினருக்கும் ஒன்றிய அரசும், மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். இது மனிதாபிமான செயல் எனவும் அவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என பழ.நெடுமாறன் கூறினார்.

Related Stories: