தமிழகத்தில் 6 நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது: மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு

கரூர் : தமிழகத்தில் தற்போது ஆறு நாட்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது என்று தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், மழையின் காரணமாக கடந்த 2 நாட்கள் மின் நுகர்வு குறைந்துள்ளது; 2 மணிநேரம் மட்டுமே காற்றாலை மின்சாரம் எடுக்கப்பட்டுள்ளது. உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கும் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் மின் உற்பத்தி வீணாவதை தடுத்து உபரி மின்சாரத்தை பிற மாநிலங்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளோம். மின்வாரியத்தின் 2.0 திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் சொந்த மின் உற்பத்தி 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதம் என்ற நிலையை அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

கோடை காலம் தொடங்கியதை அடுத்து மின்தேவை அதிகரித்துள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளிலும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காற்று ஓரளவிற்கு பலமாக வீசி வருகிறது. இதே நேரத்தில் வெயிலின் தாக்கமும் குறையவில்லை. தமிழகத்தில் அதிகரித்துள்ள காற்றின் வேகம் மற்றும் வெயில் சூழல் காரணமாக காற்றாலை மற்றும் சூரிய சக்தி மூலமாக அதிகளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது நினைவுகூரத்தக்கது.

Related Stories: