வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை 5 மணியளவில் கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்தார். நேற்று சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. கொரோனாவுக்குப் பின்னர் சபரிமலையில் நடைதிறக்கும் நாளன்று பக்தர்கள் தரிசனம் செய்ய இதுவரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால் நேற்று முதல் நடை திறந்த அன்றே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

வரும் 19ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். தினமும் மகா கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகளுடன் உதயாஸ்தமன பூஜை, படி பூஜை, களபாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். இந்த நாட்களில் தினமும் நெய்யபிஷேகமும் நடைபெறும்.

Related Stories: