சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்த கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி..!!

சென்னை: சென்னை மயிலாப்பூரில் ஆடிட்டர் தம்பதியை கொலை செய்த கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து திரும்பிய ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் மயிலாப்பூரில் உள்ள வீட்டில் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்டனர். கொலையாளிகளை அடையாளம் கண்ட போலீசார் நேபாளத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பதம் லால் கிருஷ்ணா, அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து கைது செய்தனர். இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு, புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர்.

குற்றவாளிகளிடமிருந்து 1,127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், கொலையாளிகள் இருவரும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மயிலாப்பூர் போலீஸார் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கொலை செய்த கிருஷ்ணா, ரவி ராய் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

Related Stories: