தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் நவரை பட்டம் நெல் சாகுபடி வயல்களில் களை எடுக்கும் பணி

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் வேளாண் வட்டாரத்தில் சம்பா அறுவடை முடிந்த நிலையில் நவரை பட்டம் நெல் நடவு சாகுபடியை விவசாயிகள் தொடங்கி உள்ளனர். தா.பழூர் வேளாண் வட்டாரத்திற்கு உட்பட்ட காரைக்குறிச்சி, வாழைக்குறிச்சி, அருள்மொழி, இடங்கண்ணி, ஸ்ரீபுரந்தான், கோடாலிகருப்பூர், சோழன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கருக்கு மேல் நவரை பட்டம் நெல் நடவு சாகுபடி செய்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது நவரை பட்டம் நெல் நடவு வயலில் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். சன்ன ரகம் நெல் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் முதல் களை 15 நாட்களுக்குள் எடுத்து உரம் இடவேண்டும். 2வது களை 30 லிருந்து 35 நாட்களுக்குள் எடுக்க வேண்டும். நவரைபட்ட நெல் நடவு சாகுபடிக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories: