மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் மீது வழக்கு

மதுரை: மதுரையில் அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாக பாஜகவினர் 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பாஜகவின் புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களின் கூட்டம் மதுரையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதற்காக எந்தவித அனுமதியும் இன்றி வைக்கப்பட்ட பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். இதனை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, அங்கிருந்த போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அனுமதியின்றி பேனர் வைத்ததாக மதுரை மாநகர பாஜக தலைவர் சரவணன் உள்பட 25 பேர் மீது தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்  வகையில் பேனர்கள் வைக்கப்பட்டதாக புகார்கள் வந்ததை அடுத்து போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: