பெரம்பலூரில் வாய்க்கால்களை தூர்வாரும் பணி தீவிரம்: 50 ஆண்டுகளாக காணாமல் போன மருதையாற்றை மீட்டது தமிழக அரசு

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் வாய்க்கால்களை தூர்வாரும் பணியின்போது 50 ஆண்டுகளாக காணாமல் போன மருதையாற்றை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டரை கோடி ரூபாய் செலவில் மருதையாறு மற்றும் வேதநதி ஆகிய பிரதான காடாற்றுகளின் கிளை வாய்க்கால்களை கடந்த 10 நாட்களாக போர்கால அடிப்படையில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது விளாமுத்தூரில் தொடங்கி 5 கி.மீ. தொலைவிற்கு புதர்மண்டி வனம் போல் காட்சியளித்த மருதையாறு மீட்டெடுக்கப்பட்டது.

50 ஆண்டுகளாக காணாமல் போன மருதையாற்றை மீட்டெடுத்ததற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்தனர். பெரம்பலூர் நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீர் மருதையாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் கொண்டலை நீர்தேக்கம் வரையிலான 20 கி.மீ. தொலைவிலான மருதையாற்றை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.          

Related Stories: