ரகசிய வாக்கெடுப்பில் 1,416 ஓட்டுகள் பெற்று ஹாங்காங் புதிய தலைமை நிர்வாகியாக ஜான் லீ தேர்வு

ஹாங்காங்: ஹாங்காங்கில் புதிய தலைமை நிர்வாகி தேர்வுக்கு நடந்த ரகசிய வாக்கெடுப்பில் 1,416 ஓட்டுகள் பெற்று முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான ஜான் லீ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனா வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், சீனாவுக்கு விசுவாசமாக இருப்பவரே மறைமுகமாக ஹாங்காங் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். இதன் புதிய நிர்வாகியை தேர்வு செய்வதற்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் நேற்று நடந்தது. இதில், சீனாவால் நிறுத்தப்பட்ட ஜான் லீ வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 1,500 பிரதிநிதிகள் வாக்குகளில், வெற்றி பெறுவதற்கு 751 வாக்குகளே போதுமானது. ஆனால், 1,416 வாக்குகளை பெற்று ஜான் லீ வெற்றி பெற்றார். இவர் ஜூலை 1ம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories: