சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம்: தனியார் ஓட்டலுக்கு சீல்

ஒரத்தநாடு: தஞ்சாவூர் அருகே கெட்டுப்போன சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும்  மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இரண்டாமாண்டு படித்து வரும் பிரவீன் (22), பரிமளேஸ்வரன்(21), மணிகண்டன் (21) ஆகிய 3 பேரும் ஒரத்தநாடு தென்னமநாடு பைபாஸ் சாலை அருகே உள்ள தனியார் ஓட்டலில் நேற்றுமுன்தினம் மாலை சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து 3 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து 3 பேரும் ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 3 பேருக்கும் தொடர்ந்து தீவிர அளிக்கப்பட்டு வருகிறது.தகவல் அறிந்த தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சித்ரா தலைமையிலான அலுவலர்கள் நேற்று அந்த ஓட்டலை ஆய்வு செய்ததில், கெட்டுபோன சிக்கன் ஷவர்மா விற்றது தெரியவந்தது. பின்னர் அவற்றை அதிகாரிகள் ஆய்வுக்காக எடுத்து சென்றதோடு , சம்பந்தப்பட்ட ஓட்டலுக்கு சீல் வைத்தனர்.

Related Stories: