திருவாரூரில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவாரூர்: திருவாரூரில் திடீரென பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவாரூர் நகர்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.புலிவலம், வளவயக்கால், கே.டி.ஆர்.நகர், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களில் கனமழை பெய்து வருகிறது.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி,  வெப்பசலனம் காரணமாக சுமார் 3 மணி நேரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: