அப்போலோ குழுமம் சார்பில் கொரோனா விளக்க நூல் வெளியீடு

சென்னை: அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சார்பில் நேற்று கொரோனா விளக்க நூல் வெளியிடப்பட்டது. அப்போலோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் கன்வார் மற்றும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த மூத்த சுகாதார நிபுணர்கள் 79 பேர் எழுதிய கொரோனா விரிவான விளக்க வெளியீடு நிகழ்ச்சி நேற்று இணைய வழியில் நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட புதிய புள்ளிவிவரங்கள் மற்றும் விஞ்ஞான தகவல்கள், புதிய அறிக்கைகள் மற்றும் 19 நாடுகளில் தேசிய சுகாதார சேவைகள் வழங்கிய ஆலோசனைகள் இந்த புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியதாவது:மனிதகுலத்திற்கு கொரோனாவின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாதது. சமூக, பொருளாதார அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. கொரோனாவிற்கு எதிராக  விஞ்ஞானம் மற்றும் விடாமுயற்சியுடன் கூட்டாகப் போராட வேண்டும். இந்த விடாமுயற்சியுடன் தான் 80 ஆசிரியர்கள் இந்த தனித்துவமான புத்தகத்திற்கான பங்களிப்புகளை செய்துள்ளனர்.அவர்களின் கற்றல் மற்றும் அனுபவத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த புத்தகம் வடிவமைக்காப்பட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு பங்களிக்க நேரம் ஒதுக்கியதற்காக ஒவ்வொரு எழுத்தாளரையும் பாராட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்….

The post அப்போலோ குழுமம் சார்பில் கொரோனா விளக்க நூல் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: