ஜி.கே.வாசன் வலியுறுத்தல் பாலியல் தொல்லை அளிப்பவர்களை தூக்கிலிட வேண்டும்

சென்னை: தமாகா சார்பில் மே தின விழா, சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. மாநில துணை தலைவர் விடியல் சேகர் தலைமை வகித்தார். தொழிற்சங்க பொது செயலாளர் கே.ஜி.ஆர். மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க தலைவர் இளவரி தொடக்க உரையாற்றினார். விழாவில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கலந்துகொண்டு பேசியதாவது:  சமீபகாலமாக பெண்களுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பது அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாலியல் தொல்லை கொடுப்பவர்களிடம் விசாரணை என்ற பெயரில் வழக்கை நீட்டிக்கக்கூடாது. இவர்தான் குற்றவாளி என முதல் நிலையில் அறிந்த உடனேயே அவர்களை தூக்கிலிட வேண்டும். அவ்வாறு தூக்கிலிட்டால் அதை தமாகா வரவேற்கும். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாநில நிர்வாகிகள் சக்திவேல், ஜவகர் பாபு, ராஜம் எம்.பி. நாதன், டி.என்.அசோகன், கே.ஆர்.டி. ரமேஷ், மகளிர் அணி தலைவி ராணி கிருஷ்ணன், வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, மாவட்ட தலைவர்கள் சைதை மனோகரன், அருண்குமார், ரவிச்சந்திரன், பாலா, முனைவர் பாட்சா, சத்திய நாராயணா, கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: