ரம்ஜானை முன்னிட்டு சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

பெரம்பலூர் : ரம்ஜான் நெருங்கியும் சிறுவாச்சூர் ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தமாக உள்ளது. ரம்ஜான் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்க ளால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.இதற்காக நடப்பாண்டு மார்ச் 3ம்தேதி தொடங்கி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து தொழுகைகள் நட த்தி ஏப்ரல் 3ம்தேதிரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட வுள்ளது.இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஆட்டுச்சந்தை நேற்றுக் காலை திருச்சி- சென்னை தேசிய நெடுஞ் சாலை பஸ் நிறுத்தம் கிழக் கே வழக்கம் போல் நடைபெற்றது.

ரம்ஜான் பண்டிகை க்கு சிலதினங்களே பாக்கி யிருந்தும் நேற்று நடைபெ ற்றஆட்டுச்சந்தைக்கான ஆ டுகள் வரவு, வழக்கம்போல் இருந்தும்,சாதாரண சந்தை யைவிட விற்பனை மந்தமா கவே நடைபெற்றது. சந்தை க்கு சிறுவாச்சூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இரு ந்து 1500முதல் 2000 ஆடுக ள் ஏலத்திற்கு கொண்டுவ ரப்பட்டன. இதனை ஏலமெ டுக்க 50க்கும் குறைவான

வியாபாரிகளே வந்திருந்தனர். ஆடு கிலோ 800க்கு விற்கப்படுகிற நிலையில் குறைந்த பட்சம் ரூ8ஆயிரம் முதல் அதிகப் பட்சம் ரூ25 ஆயிரம் வரை விலைவைத்து பேரம்பேசப்பட்டது.பெரம்பலூர் மாவட்டம் மட்டுமின்றி சேலம்மாவட்டம் தலை வாசல், திருச்சி மாவட்டம் து றையூர் மற்றும் அரியலூர் பகுதிகளில் இருந்தும் ஆட் டு வியாபாரிகள் ஆடுகளை விலைக்கு வாங்கிச் சென்றனர்.

Related Stories: