தென்னிந்திய சினிமாவை ஒதுக்கியது ஒரு காலம்: சிரஞ்சீவி பிளாஷ்பேக்

ஐதராபாத்: தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்துள்ள ஆச்சார்யா படம் நேற்று திரைக்கு வந்தது. இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சியில் தனது பழைய நினைவுகளை சிரஞ்சீவி பகிர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது:டெல்லி அரசு 1989ல் எனக்கு நர்கீஸ் தத் விருது கொடுத்தது. இந்த விருது பெற நான் டெல்லி சென்றிருந்தேன். அந்த விழா நடைபெறும் இடத்தில் இருந்த சுவரில் இந்தி சினிமாவின் பிரபலமானவர்களின் புகைப்படங்கள் எல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அதில் தென்னிந்திய கலைஞர்களின் படங்களையும் நான் எதிர்பார்த்தேன். ஒரு மூலையில் எம்ஜிஆர், பிரேம் நசீர் ஆகியோரின் புகைப்படம் மட்டுமே இருந்தது. என்.டி.ராமராவ், சிவாஜி, நாகேஸ்வர ராவ், ராஜ்குமார் உள்பட தென்னிந்திய ஜாம்பவான்களின் புகைப்படங்களே அங்கு இல்லை.

மாநில மொழி படங்களை வெறும் பிராந்திய படங்களாகவே பார்க்கிறார்கள். இந்தி சினிமாதான் அவர்களுக்கு இந்திய சினிமாவாக இருக்கிறது என்பது புரிந்தது. சில ஆண்டுகள் வரையும் இந்த நிலைதான் இருந்தது. ஆனால், பாகுபலி படம் வந்த பிறகு அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இப்போது தென்னிந்திய படங்களைத்தான் வட நாட்டில் கொண்டாடுகிறார்கள். இந்த நிலையை எட்ட பல அவமானங்களை நாம் தாங்கியிருக்கிறோம். அதையெல்லாம் தாண்டித்தான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம்.

Related Stories: