ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவில் சித்திரை திருவிழாவின் போது ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம்

திருச்சி: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் தாயாருக்கு வஸ்திர மரியாதை 28.4.22 வழங்கப்பட்டது.  25.4.22 நடைபெறும் திருத்தேரோட்டத்தின் போது நம்பெருமாள் வஸ்திரங்களை அணிந்து காட்சியளிப்பார்.  ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்திற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவின் போது ஸ்ரீரங்கம் நம்பருமாளுக்கு வஸ்திர மரியாதை செய்யும் வைபவம் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

அதன்படி  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலிருந்து ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமிக்கும், உற்சவர் நம்பருமாளுக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் அரங்கநாயகி தாயாருக்கும், நாச்சியார்களுக்கு பட்டு புடவைகள் மாலை மற்றும் மங்களப் பொருட்கள் கொண்டு வந்திருந்தனர். இதனை ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் நிர்வாகிகள் எடுத்து வந்து, ஸ்ரீரங்கம் கோவில் இணைஆணையர் மாரிமுத்து முன்னிலையில் கோவில் பட்டாச்சாரியார்கள் இடம்  ஒப்படைத்தனர். முன்னதாக நம்பெருமாளுக்கான வஸ்திரங்கள், பழங்கள் மற்றும் பூக்கள் யாவும் கருட மண்டபத்தில் இருந்து திருக்கோயில் பிரகாரங்களில் வலம்வந்து பின்னர் மூலஸ்தானம் கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் நாளை நடைபெறும் சித்திரை திருத்தேரோட்டத்தின்போது இந்த வஸ்திரங்களை நம்பெருமாளுக்கும், தாயாருக்கு அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளையதினம் திருதேரோட்டத்தின் போது பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய சிறப்பான வசதிகள் செய்யப் பட்டுள்ளதாகவும், பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தெரிவித்தார்.

Related Stories: