அனைத்து கட்சி தலைவர்களுக்கு கடிதம்: கூட்டணி ஆட்சிக்கு தயார்

கொழும்பு: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் நிதி, பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் கடந்த 9ம் தேதி முதல் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ராஜபக்சேக்கள் தலைமையிலான அரசை கலைத்து விட்டு, அனைத்து கட்சிகளையும் கொண்ட இடைக்கால கூட்டணி அரசை நிறுவ எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இதையே தேர்தல் ஆணையமும் வலியுறுத்தியது. இதனிடையே, மகிந்த ராஜபக்சே வரும் 30ம் தேதிக்குள் பதவி விலகவில்லை என்றால், அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. இந்நிலையில், அதிபர் கோத்தபய நேற்று அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஏப்ரல் 29ம் தேதி (நாளை) அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலகியதும் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய கூட்டணி அரசை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி கலந்து ஆலோசிக்க அரசு தயாராக இருக்கிறது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: