உயிரோடு தப்பினால் மட்டுமே வாரிசு உண்டு; ‘செக்ஸ்’ முடிந்த பின் பெண் சிலந்தியை கொன்று தின்னும் ஆண் சிலந்தி: சீனாவின் ஹூபே பல்கலை. ஆராய்ச்சியாளர் தகவல்

ஹூபே: சீனாவின் ஹூபே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஷிசாங் ஜாங் என்பவர் வெளியிட்ட உயிரியல் ஆய்வறிக்கையில், ‘உலகளவில் 300 வகையான சிலந்திகள் உள்ளன. இவை கூட்டாக வாழும் உயிரினமாகும். இந்த உயிரினங்கள் தங்களது இனப்பெருக்கத்தின் போது செக்ஸ் வைத்துக் கொள்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், ‘பிலோபொனெல்லா ப்ரோமினென்ஸ்’ என்று சிலந்தியின் செக்ஸ் வித்தியாசமானது. ஆண் சிலந்தி, பெண் சிலந்தியுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட பின்னர், பெண் சிலந்தியை கொன்று உணவாக ஆண் சிலந்தி உட்கொள்ளும்.

இருந்தும் இந்த இனத்தின் இனப்பெருக்கம் எப்படி உருவாகிறது என்றால், செக்ஸ் வைத்துக் கொண்ட அடுத்த வினாடிக்குள் ெபண் சிலந்தி, ஆண் சிலந்தியின் பிடியில் இருந்து தப்பிவிடும். வினாடிக்கு 88 சென்டி மீட்டர் அதாவது வினாடிக்கு 34.6 அங்குலம் வேகத்தில் ெபண் சிலந்தி ஓடிவிடும். , உடலுறவு கொண்ட பிறகு, பெண் சிலந்திகள் கால்கள் தனது ஹைட்ராலிக் அழுத்தத்தால்  அங்கிருந்து காற்றில் பறப்பது போல் வேகமாக தப்பிவிடும். அதன்பின் ஆண் சிலந்தி, பெண் சிலந்தியை கொன்று சாப்பிடாது.

இவற்றை மிகவும் உன்னிப்பான கேமராக்கள் மூலம் தான் கண்டறிய முடிந்தது. எங்களது ஆய்வில் உடலுறவுக்குப் பிறகு தப்பிய பெண் சிலந்திகள் எத்தனை என்று ஆய்வு செய்த போது, 155 சோதனைகளில் 152 பெண் சிலந்திகள் ெசக்சுக்கு பின்னர் ஆண் சிலந்தியிடம் இருந்து தப்பின. அதேநேரத்தில் ஆண் சிலந்தியின் பிடியில் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்ட 3 சிலந்திகள் ஆண் சிலந்திக்கு உணவாக மாறின’ என்று அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.

Related Stories: