வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் தென்தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: இலங்கை, அதை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்தது. தென்தமிழகம், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல் ,கிருஷ்ணகிரி, கரூர், திருச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. குமாரி, நெல்லை, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி, அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா, காரைக்காலில் நாளை மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Related Stories: