உலகம் 12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!: அமெரிக்காவின் FDA அமைப்பினர் தீவிர ஆலோசனை..!! Jun 11, 2021 அமெரிக்கா FDA வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஐக்கிய மாநிலங்கள் தின மலர் வாஷிங்டன்: அமெரிக்காவில் 12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து FDA எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் உயர்மட்ட குழு தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருவதை அடுத்து பல்வேறு நாடுகள் 12 முதல் 15 வயதுடைய சிறுவர்களுக்கும் தடுப்பூசி அளிக்க அனுமதி அளித்துள்ளன. கடந்த 4ம் தேதியில் இருந்து பிரிட்டனில் 12 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 12 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜெர்மனியும் கடந்த 7ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தி வருகிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மே 10ம் தேதியில் இருந்து 12 முதல் 15 வயதான சிறார்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் 12 வயதுக்கும் கீழுள்ள சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடுவது குறித்து FDA இன்று தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டது. அமெரிக்காவின் மேரிலாண்டில் நடைபெற்ற கூட்டத்தில் FDA வின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டு 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி அளிப்பது குறித்து கலந்துரையாடினர். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் நற்பயனை அளித்து வருவதால் அமெரிக்காவில் விரைவில் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி அளிக்க FDA அனுமதி அளிக்கும் என்று தெரிகிறது. … The post 12 வயதுக்கும் கீழுள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி!: அமெரிக்காவின் FDA அமைப்பினர் தீவிர ஆலோசனை..!! appeared first on Dinakaran.
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்
வெளிநாட்டு முகவர் மசோதாவை சட்டமாக்க கடும் எதிர்ப்பு.. ஜார்ஜியா நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே மோதல்..!!
விலை உயர்வை கண்டித்து பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரசுக்கு எதிராக 4வது நாளாக தொடரும் போராட்டம்..!!
பெண்கள், சிவப்பு வண்ண உதட்டுச்சாயம் பூசினால் அபராதம்: வடகொரிய நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் விநோத அறிவிப்பு