புரட்சி பாரதம் கட்சியின் சகோதரத்துவம் பண்பாட்டு கூடல் விழா: 23ம் தேதி நடக்கிறது

திருவள்ளூர்: புரட்சி பாரதம் கட்சியின் நிறுவனர் பூவை எம்.மூர்த்தியின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 23 ம் தேதி சனிக்கிழமை 4 மணி அளவில் பூந்தமல்லி ஒன்றியம், நேமம், ஆண்டர்சன் பேட்டையில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சகோதரத்துவ பண்பாட்டு கூடல் விழா நடைபெற உள்ளது இந்த விழாவை முன்னிட்டு பகவான் புத்தர் சிலை திறப்பு விழா மற்றும் புத்த வந்தனம் பாபாசாகேப் அம்பேத்கர் சிலை திறப்பு விழா ஆகியவை நடைபெற உள்ளது. விழாவிற்கு புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும்,கே.வி.குப்பம் தொகுதி எம்எல்ஏ வுமான பூவை எம்.ஜெகன் மூர்த்தி தலைமை வைக்கிறார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், பி.வி.ரமணா, பா.பென்ஜமின், எஸ்.அப்துல் ரஹீம், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன், முன்னாள் எம்பி கே.வேணுகோபால், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, குடந்தை அரசன், நாகை திருவள்ளுவன், ஜெயசீலன், ராஜீவ் முருகன், கௌதமன், கதிரவன், பாரதி பிரபு மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்கின்றனர். கட்சியின் தலைமை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள விழா குழு ஒருங்கிணைப்பாளர்கள் டி.ருசேந்திரகுமார், பரணி பி.மாரி, கூடப்பாக்கம் இ.குட்டி, வழக்கறிஞர் கே.எம்.ஸ்ரீதர், கே.எஸ்.ரகுநாத், சித்துக்காடு எஸ்.ஏகாம்பரம், என்.மதிவாசன் ஆகியோர் வருகின்ற 23 ம் தேதி நடைபெற உள்ள சகோதரத்துவ பண்பாட்டு கூடல் விழாவில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள், அணி பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பது குறித்தும், இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

Related Stories: