சீனாவில் 2.5 கோடி மக்களுக்கு வீட்டுச் சிறை; கொரோனாவுக்கு ஷாங்காயில் மூவர் பலி.! முதன் முதலாக இறப்பை உறுதிசெய்த சீனா

ஷாங்காய்; கொரோனா கட்டுப்பாடுகளால் சீனாவில் சுமார் 2.5 கோடி மக்கள் வீட்டுச் சிறையில் உள்ள நிலையில், ஷாங்காயில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானதாக அந்நாடு முதன் முதலாக இறப்பை உறுதி செய்து அறிவித்துள்ளது. சீனாவில் கொரோனா தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், தினசரி கொரோனா பாதிப்புகள் ஷாங்காய் நகரில் அதிகரித்து வருகின்றன.

அதனால் ஷாங்காய் நகரில் லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் ஷாங்காயில் புதிதாக 2,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இறந்தவர்கள் 89 முதல் 91 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்களுக்கு ஏற்கனவே பல நோய்கள் இருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஷாங்காயில் நேற்று மட்டும் 3,238 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும், 21,582 பேருக்கு கொரோனா அறிகுறி இருந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் மட்டும் சுமார் 44 நகரங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனாவில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. ஷாங்காய் நகரம் கொரோனாவின் மையமாக மாறிவருகிறது. லாக்டவுன் காரணமாக, சீனாவில் 2.5 கோடி மக்கள் தங்கள் வீடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: