டெல்லி அனுமன் யாத்திரையில் ஆயுதங்களுடன் ஊர்வலம் செல்லும் சிறுவர்கள்!: போலீசார் மீது துப்பாக்கிச்சூடு..வெளிவந்த அதிர்ச்சி வீடியோ..!!

டெல்லி: டெல்லியில் அனுமன் யாத்திரையின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் பயங்கர ஆயுதங்களோடு பேரணியாக சென்று கலவரத்தில் ஈடுபட்டதும், போலீசாரை வன்முறை கும்பல் துப்பாக்கியால் சுட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அந்த வகையில் டெல்லியில் உள்ள சஹாங்கீர்பூரி பகுதியில் நடைபெற்ற அனுமன் யாத்திரையில் கலவரம் வெடித்தது. இருதரப்பினர் இடையே நடைபெற்ற கல்வீச்சு தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர். கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் போலீஸ்காரருக்கும் காயம் ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் பேரணியின் போது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் வாளோடு சென்று கோஷம் எழுப்பியதும், கலவரத்தில் ஈடுபட்ட காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன. இதேபோல் கலவரத்தின் போது போலீசார் ஒருவரை இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. துப்பாக்கிசூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி கலவரம் தொடர்பாக இதுவரை சிறார் உட்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட மேலும் பலரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories: