உதகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துங்கள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

உதகை; உதகை அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்படி மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். உதகை சென்றுள்ள மக்கள் நல்வாழ்வத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்கிருந்த நோயாளிகள், அவர்களது உறவினர்களிடமும் ஆரம்ப சுகாதார மையத்தின் சேவைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தனர். 24 மணி நேரமும் சுடுதண்ணீர் கிடைப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் என்று நோயாளிகள் கேட்டுக் கொண்டனர். இதன் தொடர்ச்சியாக ஆரம்ப சுகாதார நிலையத்தின் பணியாளர்கள், சுகாதார நிலையத்துக்குள் குரங்குகள் நுழைந்து தொல்லை கொடுப்பதாகவும், சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தித் தரும்படி அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். சுகாதார நிலையத்தின் பதிவேட்டில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொறுப்புடன் பணியாற்றி வருவதாக அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: