சித்திரை திங்கள் முழு நிலவு நாள் விழா கண்ணகி, தொல்காப்பியர் சிலைக்கு மரியாதை

சென்னை: சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளை முன்னிட்டு கண்ணகி மற்றும் தொல்காப்பியர் சிலைக்கு அமைச்சர்கள் இன்று மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திங்கள் முழுநிலவு நாள் அன்று சென்னையில், தமிழ்நாட்டின் கலாச்சாரச் சின்னமாகத் திகழ்ந்து வரும் கண்ணகியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, சென்னை மெரினா கடற்கரை, காமராசர் சாலையில் அமைந்துள்ள கண்ணகி சிலைக்கு 16ம் தேதி (இன்று) காலை 10 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டு, மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். தமிழின் மூத்த இலக்கண நூலான  தொல்காப்பியத்தை படைத்த தொல்காப்பியருக்கு ஆண்டுதோறும் சித்திரை முழுமதி  நாளில் சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு  மாலை அணிவித்தும் சிலைக்கு அருகில் புகைப்படம் வைத்து மலர்தூவியும் தமிழ்  வளர்ச்சித் துறையால் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இவ்வாண்டு  சித்திரை முழுமதி நாளான (ஏப்.16) இன்று  காலை 10 மணிக்கு சென்னை  பல்கலைக்கழக மெரினா வளாகத்தில் உள்ள தொல்காப்பியரின் உருவச் சிலைக்கு மாலை  அணிவித்து மலர்தூவி சிறப்புச் செய்யும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தமிழறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

Related Stories: