உக்ரைன் மக்களுக்கு ஆதரவாக ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் ரஷ்ய வீரரின் கழுத்தை அறுத்து கொன்ற நடிகை: சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

கீவ்: ஐஎஸ் தீவிரவாதிகள் பாணியில் ரஷ்ய வீரரின் கழுத்தை அறுத்து கொன்ற உக்ரைன் நடிகை அட்ரியானா குரிலெட்ஸின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யப் படைகளின் தாக்குதல் 2 மாதங்களை கடந்த நிலையில் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகளாகவும், ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியும் உள்ளனர். இந்நிலையில் உக்ரைன் நாட்டு நடிகை அட்ரியானா குரிலெட்ஸ் என்பவர் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக அவ்வப்போது பேசி வருவார்.

இந்நிலையில் நடிகையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அதில் உக்ரைன் விவசாயி போன்று உடையணிந்துள்ள அட்ரியானா குரிலெட்ஸ், புல்வெளியில்  வளரும் செடிகளை வெட்டும் அரிவாளை கையில் வைத்துள்ளார். தொடர்ந்து சிரித்துக் கொண்டே, ரஷ்ய வீரர் ஒருவரின் கழுத்தை அரிவாளால் வேகமாக அறுத்துக் கொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அப்போது அவர் கூறுகையில், ‘பல நூற்றாண்டுகளாக ரஷ்யர்கள் எங்களை ஒடுக்கி வைத்து கொன்று வருகின்றனர்.

அவர்கள் பன்றிகள்; அவர்களுக்கு மரணத்தை அளிக்கிறேன். உக்ரைன் மக்களை தொடர்ந்து தாக்கி வந்தால், ரஷ்ய மக்கள் அனைவரின் கழுத்தையும் அறுத்துக் கொல்வேன்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோவை ரஷ்ய  உள்துறை அமைச்சரின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ தனது டெலிகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை போன்று, உக்ரைன் நடிகை அட்ரியானா குரிலெட்ஸ் ரஷ்ய வீரர் ஒருவரை கழுத்தை அறுத்துக் கொல்கிறார்.

ஐஎஸ்ஐஎஸ் பாணியில் கழுத்தை அறுத்துக் கொல்லும் நடிகையின் வீடியோ குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரஷ்ய விசாரணைக் குழுவின் தலைவர் அலெக்சாண்டர் பாஸ்ட்ரிகின் தலைமையிலான குழுவினர், நடிகையின் மீது கிரிமினல்  வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் பாணியை போன்று உக்ரைன் நடிகை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

முதற்கட்ட விசாரணையில் நடிகை அட்ரியானா குரிலெட்ஸ் விளம்பரத்திற்காக நடித்து காட்டியது என்றும், அது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் உருவாக்கப்பட்ட வீடியோக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: