புதிய பிரதமர் பதவியேற்ற நிலையில் முன்கூட்டியே தேர்தலை நடத்துங்க! இம்ரான் கான் வேண்டுகோள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் நேற்று பதவியேற்ற நிலையில், புதிய அமைச்சர்கள் ஒதுக்கீடு யார் யாருக்கு? என்பது குறித்து கூட்டணி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. நாடாளுமன்ற ஆயுட்காலம் இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தலை நடத்த பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுதான் முன்னோக்கி செல்லும் ஒரே வழி; நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்துவதன் மூலமே, நாட்டு மக்கள் யாரை பிரதமராக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். வரும் 13ம் தேதி (நாளை) பெஷாவரில் நடைபெறும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளேன். வெளிநாட்டுச் சதியால் எங்களது ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில் நடத்தப்படும் முதல் பேரணியாகும். பாகிஸ்தான் சுதந்திரமடைந்தால் மட்டும் போதாது; அந்நிய சக்திகளின் கைப்பாவையாக அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

Related Stories: