திருத்துறைப்பூண்டியில் சேறும், சகதியாக மாறிய காவலர் குடியிருப்பு பகுதி சாலை

திருத்துறைப்பூண்டி : திருத்துறைப்பூண்டி காவல்நிலையம், காவலர் குடியிருப்பு பகுதி செல்லும் சாலை மழையால் சேறும் சகதியாக மாறியதால் சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் காவல்நிலையம், காவலர் குடியிருப்பு கட்டும்போது எதிரே உள்ள மன்னை சாலை உயரம் குறைவாக இருந்தது. தற்போது இந்த சாலை உயரமாகிவிட்டதால் காவல்நிலையம், காவலர் குடியிருப்பு பகுதி செல்லும் சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்ள மண் சாலை மழை பெய்கிறபோதெல்லாம் மழைநீர் தேங்கி வடிய வசதி இல்லததால் காவல்நிலையம், குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலை சேறும் சகதியுமாகிவிடும்.

இதனால் காவல் நிலையத்திற்கு வந்து செல்லும் பொதுமக்கள், காவலர் குடியிருப்புக்கு சென்று வருபவர்களும் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். காவலர் குடியிருப்பு பின்பக்கம் கழிவுநீர் தேங்கி செல்வதற்கு எந்த வழியும் இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் காவலர் குடியிருப்பு கட்டி 10 ஆண்டுகளுக்கு மேல்ஆகிவிட்டது. எனவே காவலர் குடியிருப்பு வீடுகளை பராமரிப்பு செய்ய வேண்டும், கழிவுநீரை வெளியேற்றுவதற்கான வசதி ஏற்படுத்த வேண்டும், சாலையை சீரமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், காவலர் வீட்டுவசதி வாரியம் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: