தமிழகம் முழுவதும் 60 இடங்களில் பழுதடைந்த வீடுகளை இடித்து விட்டு புதிய குடியிருப்புகள்: அமைச்சர் முத்துசாமி பேட்டி

சேலம்: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் பழுதடைந்த வீடுகளை இடித்துவிட்டு புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ளது என வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, நேற்று காலை சேலம் வந்தார். சேலம் அய்யந்திருமாளிகை வீட்டு வசதிவாரிய அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் 195 இடங்களில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் உள்ளன. இதில், 60 இடங்களில் உள்ள குடியிருப்புகள் இடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. அங்கெல்லாம் அந்த கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை நிலுவை வசூலிப்பதில் இருக்கும் குழப்பத்தை தீர்க்க ஒரு கமிட்டி உருவாக்கி பரிந்துரையை பெற முடிவு செய்திருக்கிறோம். அந்த கமிட்டியில் ஒரு நீதிபதி இருந்தால் தெளிவான பரிந்துரைகள் கிடைக்கும் என்பதால்,முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அதனை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு  அமைச்சர் முத்துசாமி கூறினார்.

Related Stories: