ராம நவமி எதிரொலி: ஓசூரில் பூக்கள் விற்பனை ஜோர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தளி, சூளகிரி பகுதிகளில், காய்கறிகளுக்கு அடுத்த படியாக மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இன்று ராமநவமி என்பதால், பூக்கள் விலை அதிகரித்து காணப்பட்டது. நேற்று ஒரு கிலோ மல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.160க்கும், சம்பங்கி ரூ.200க்கும், பட்டன் ரோஸ் ரூ.100க்கும், செண்டுமல்லி ரூ.50க்கும், அரளி ஒரு கிலோ ரூ.250க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதனால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இன்று (10ம் தேதி) ராமநவமி என்பதால் நேற்று பூக்கள் விற்பனை அதிகரித்தது. ஓசூர் பகுதியிலிருந்து வெளி மாவட்டம், நகரம், மாநிலங்களுக்கு என 150 டன் மலர்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு முக்கிய நகரங்களுக்கு பூக்களை ஓசூரிலிருந்து அனுப்பப்படுகிறது. இதுதவிர கர்நாடகாவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது,’ என்றனர்.

Related Stories: