மதுரை சித்திரை திருவிழா முதல்நாள் சிறப்பான முறையில் நடைபெற சிறப்பு ஏற்பாடு: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: மதுரையில் நடைபெறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சென்னை, நுங்கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று (05.04.2022) வருகின்ற சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட இருக்கின்ற அறிவிப்புகள் குறித்து அனைத்து மண்டல அலுவலர்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இரண்டாம் நாளாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அவர்கள் பேசும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டிதலின்படி பக்தர்களின் நலன்கருதி இந்து சமய அறநிலையத்துறை துரிதமாக செயலாற்றி வருகிறது. கடந்த சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் வருகின்ற சட்டமன்ற மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட உள்ள அறிவிப்புகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

திருத்தணிகை, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர் மலை, திருக்கழுங்குன்றம், ஆகிய 5 மலைத் திருக்கோயில்களில் கம்பி வட ஊர்தி வசதி செய்திட தொழில் நுட்ப வல்லுநர் குழுவினர்களால் சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டுள்ளது. சோளிங்கர், ஐய்யர் மலை, ஆகிய மலைக்கோயில்களில் புதிய ரோப் கார் வெள்ளோட்டம் விரைவில் நடைபெற இருக்கிறது. திருக்கோயில்களின் நடைபெறும் அன்னதான திட்டம் மருத்துவ மையம் செயல் பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது, மதுரையில் நடைபெறும் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரை பெருவிழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்து விதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆட்சி ஆன்மீக அன்பர்களுக்கு வரப்பிரசாதமாகும், திருக்கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பணியாளர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும், திருக்கோயில்களின் கோபுரங்களில் பொருத்தப்பட்டுள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுபிக்கப்படும். மேலும், தேவையான இடங்களில் புதிதாக பொருத்தப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து 9 திருக்கோயில்களில் இடிதாங்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. 163 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் பி. சந்திரமோகன், இ.ஆ.ப., ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர்கள் திரு.இரா.கண்ணன், இ.ஆ.ப.,  திருமதி ந.திருமகள், திருமதி சி.ஹரிப்ரியா மற்றும் அனைத்து மண்டல அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: