மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை ஒன்றிய அரசு தரவில்லை: மின்சாரத்துறை அமைச்சர் செந்திபாலாஜி குற்றச்சாட்டு

கோவை: தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே தருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; இந்த ஆண்டில் தமிழ்நாட்டிற்கு தேவையான 17 ஆயிரத்து 300 மெகா வாட் மின்சாரம் பூர்த்தி செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். கடந்த அதிமுக ஆட்சியில் புதிய மின் திட்டங்கள் எதுவும் கொண்டு வரப்படவில்லை. கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களையும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டது அதிமுக.

தமிழ்நாட்டின் மின் உற்பத்திக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில் ஒன்றிய அரசு 48 ஆயிரம் முதல் 50 டன் நிலக்கரி மட்டுமே தருகிறது. நிலக்கரி பற்றாக்குறையை போக்குவதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின் படி 4,80,000 டன் இறக்குமதி செய்வதற்காக ஒப்பந்தம் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அந்த ஒப்பந்த புள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு அந்த டெண்டர் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவே இந்த ஆண்டை பொறுத்தவரை நம்முடைய மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக பல்வேறு ஒப்பந்தலும் முதல்வரின் வழிகாட்டுதலின் படி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்த ஆண்டு மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக வெளிச்சந்தையில் மின்சாரம் கொள்முதல் செய்தாலும் கூட அடுத்த ஆண்டு நம்முடைய தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் நம்முடைய சொந்த உற்பத்தியை அதிகரிப்பதற்கு மின்சாரத்துறை சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.

Related Stories: